Enable Javscript for better performance
வீட்டுமனை தகராறு: 3 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுமனை தகராறில் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     உளுந்தூர்பேட்டை வட்டம், காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சேட்டு (30) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை ராஜீவ்காந்தி, ரமேஷ், பழனிவேல் ஆகிய மூவர் சேர்ந்து சேட்டுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரியவருகிறது.
     இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சேட்டு அளித்த புகாரின் பேரில் போலீஸார் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai