சுடச்சுட

  

  வெற்றி வாய்ப்பு வார்டுகளை கேட்டுப் பெற காங்கிரஸ் முடிவு

  By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் நகராட்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என அக்கட்சி முடிவுசெய்துள்ளது.
   உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரத்தில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்துக்கு நகரத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர பொதுச் செயலாளர்கள் பாபுஜீ, நடராஜன், சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் குலாம் மொய்தீன் கலந்து கொண்டார்.
   மாவட்டப் பொதுச் செயலாளர் தயானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டத் தலைவர் கஸ்தூரி செல்வம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சுரேஷ்ராஜம், மாவட்டச் செயலாளர்கள் சுந்தர், ராஜ்குமார், குப்பன், இளைஞரணி நிர்வாகி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பொதுச் செயலாளர் குமார் நன்றி கூறினார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் வடக்கு மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் வெற்றி பெற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உழைத்திட வேண்டும்.
   நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெறுதல்.
   கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், 17 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai