சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் குடிநீரைத் தேடி அலையும் அவலம்!

  By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், குடிநீரைத் தேடி நோயாளிகளும், பொதுமக்களும் அலையும் நிலை உள்ளது.
   விழுப்புரம் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற நாள்தோறும் சுமார் 2000 பேர் வரை வந்து செல்கின்றனர். தவிர, அவர்களது உறவினர்களும் வருவதால் எப்போதும் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டிருக்கும். இரவு நேரத்திலும் அவசர சிகிச்சைக்காக நோய் பாதித்தவர்களை அழைத்து வருவார்கள்.
   பிரசவம், எலும்பு முறிவு, காய்ச்சல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டோர் இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   இவர்களின் குடிநீர்த் தேவைக்கு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் குழாய் கிடையாது. முன்பு பயன்பாட்டில் இருந்த குடிநீர் குழாயும் தற்போது பயன்பாடின்றி உள்ளது.
   இதனால், நோயாளிகளும், பொதுமக்களும் குடிநீரைத் தேடி அலைகின்றனர். பலர் வெளியே சென்று டீ கடைகளில் இருந்து தண்ணீர் வாங்கி வருகின்றனர் அவசர சிகிச்சைப் பகுதி, பெண்கள், குழந்தைகள் பிரிவு, மருத்துவக் காப்பீட்டுப் பிரிவுகளில் சிறிய பிளாஸ்டிக் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்படுகிறது.
   இது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கேன்களில் உள்ள குடிநீரானது நாள் முழுவதும் போதுமானதாக இருப்பதில்லை.
   தண்ணீர் காலியானதும் அதைக் கவனிப்பதற்கு ஆள் கிடையாது. சில நேரங்களில் கேன்களில் தணணீர் இருந்தாலும், குடிப்பதற்கு டம்ளர் இருப்பதில்லை. டம்ளருக்குப் பதிலாக வாட்டர்கேனை வெட்டி வைக்கின்றனர்.
   ஆகவே, மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai