சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 860 பேர் மனு

  By விழுப்புரம்/திருக்கோவிலூர்/உளுந்தூர்பேட்டை,  |   Published on : 27th September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கான முதல் நாள் திங்கள்கிழமை 860 பேர் மனு தாக்கல் செய்தனர்.
   விழுப்புரம் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியக்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்.17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
   மாவட்டக்குழு உறுப்பினர் பதவிகள் 47ம், ஒன்றியக்குழு உறுப்பினர் 473, ஊராட்சித் தலைவர் 1,099ம், வார்டு உறுப்பினர் 8,247ம், நகராட்சி உறுப்பினர் 96, பேரூராட்சி உறுப்பினர் 243, மொத்தம் 10,205 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல் நாள் மனு தாக்கலின் போது, அரசியல் கட்சியினர் பங்கேற்கும் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி பதவிகளுக்கு ஒருவரும் மனு செய்யவில்லை. ஊராட்சி ஒன்றிக்குழு உறுப்பினர் இடங்களுக்கு 3 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் இடங்களுக்கு 46 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 81 பேரும் என்று மொத்தம் 860 பேர் முதல் நாளில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
   திருக்கோவிலூர்: ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 7 பேரும், சங்கராபுரம் ஒன்றியத்தில் 2 பேரும், ரிஷிவந்தியத்தில் ஒருவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
   உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை வட்டம், நெடுமானூர் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட ராதா வெங்கடேசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
   மேலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
   திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்: ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
   திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம்: ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்பதவிக்கு போட்டியிடுவதற்கு 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai