சுடச்சுட

    

    கார் மோதி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சாவு

    By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் அடுத்த எம்.பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(67). ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். இவர், திங்கள்கிழமை காலை காய்கறி வாங்குவதற்கு கோலியனூருக்கு சைக்கிளில் சென்றார். பின்னர், காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
     எம்.பிள்ளையார்குப்பம் பகுதிக்கு மண் சாலையில் வரும்போது, பின்னால் வந்த கார் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து, வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai