சுடச்சுட

  

  சாட்சிகளை ஆஜர்படுத்துவதில் தாமதம்: இன்ஸ்பெக்டருக்கு அபராதம்; நீதிமன்றம் உத்தரவு

  By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வழக்கு விசாரணைக்கு சாட்சிகளை ஆஜர் படுத்தாததால் காவல் ஆயவாளருக்கு ரூ.200 செலவினத் தொகை (அபராதம்) விதித்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
   விழுப்புரம் அருகே அகரம் சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சரத்குமார்(19). இவர், கடந்த 7.10.2015 அன்று செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் வரும்போது, பூத்தமேடு அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், சரத்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.
   இது தொடர்பாக அப்போது விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ராஜன், ஒரத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரமசிவம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். இவ்வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
   வழக்கில் 17 சாட்சிகள் விசாரிக்க உள்ளனர். இதில், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் சிந்தாமணியைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
   இதனிடையே, காவல் ஆய்வாளர் ராஜன் இடமாறுதலில் சென்றுவிட்டார். தற்போது, அங்கு காவல் ஆய்வாளராக செந்தில்குமார் இருந்து வருகிறார்.
   திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி சாட்சிகள் மூன்று பேரை வெகுநாள்களாக ஆஜர்படுத்தாத ஆய்வாளர் செந்தில்குமார், ரூ.200 வழக்கு செலவினத்தொகையாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai