சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு நடைபெற்று வருகிறது.
     நிகழாண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் பிளஸ் 2 துணைத் தேர்வு தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
     விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கள்ளக்குறிச்சி மற்றும் திண்டிவனத்தில் தலா ஒரு இடத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
     திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வில் விண்ணப்பித்திருந்த 484-பேரில், 454 பேர் பங்கேற்று எழுதினர். செவ்வாய்க்கிழமை தமிழ் இரண்டாம்தாள் தேர்வு நடைபெறுகிறது.
     இத்தேர்வுகள் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai