பைக் மீது கார் மோதல்: இளைஞர் சாவு
By விழுப்புரம், | Published on : 27th September 2016 09:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விக்கிரவாண்டி அருகே பைக் மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே விழுக்கம் பகுதியைச் சேர்ந்த மணி மகன் சின்ராஜ் (25). இவரது உறவினர் சிவராஜ் (20). இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பேரணி கூட்ரோடு பகுதியில் பைக்கில் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில், காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சின்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிவராஜ் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.