சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் தொடர் முழக்கப் போராட்டம்

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 27th September 2016 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை வழங்கக் கோரியும், கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
     கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வட்டச் செயலாளர் அ.பா.பெரியசாமி தலைமை வகித்தார்.
     மாநில செயற்குழு என்.குணசேகரன், மாநிலக்குழு ஜி.ஆனந்தன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர்.
     மாவட்டக் குழு நடேசன், இரா.செல்வராசு, வட்டக் குழு இரா.சாந்தமூர்த்தி, பி.மணி, என்.தனலட்சுமி, பி.மாணிக்கம், ஜி.அருள்தாஸ் உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
     கள்ளக்குறிச்சி வட்டத்தில் புதுஉச்சிமேடு, குடியநல்லூர், வடதொரசலூர், சிறுநாகலூர், கொங்கராபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை கோரி, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்,
     கள்ளக்குறிச்சி நகரில் கழிவுநீர் வெளியேற புதை சாக்கடை வசதி செய்யவேண்டும், பேருந்து நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், நகராட்சி மின் மயானத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai