சுடச்சுட

  

  மாவட்டத்தில் 10,025 உள்ளாட்சி பதவிகளுக்குத் தேர்தல்

  By விழுப்புரம்  |   Published on : 27th September 2016 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு, கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 10 ஆயிரத்து 25 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், வேட்பு மனு தாக்கலுடன் தொடங்கியது.

   26 லட்சம் வாக்காளர்கள்: மாவட்டத்தில், கிராமப் பகுதிகளில் 21 லட்சத்து 79 ஆயிரத்து 124 வாக்காளர்களும், நகரப்பகுதியில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 860 வாக்காளர்கள் என மொத்தம் 26 லட்சத்து 11 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர்.
   10 ஆயிரத்து 25 பதவிகளுக்கு
   நேரடித் தேர்தல்: இத்தேர்தலில், விழுப்புரம், கள்ளக்குறிச்தி, திண்டிவனம் ஆகிய 3 நகராட்சிகளுக்கு உள்பட்ட 96 உறுப்பினர்கள், 22 ஒன்றியக் குழுக்களுக்கு உள்பட்ட 473 உறுப்பினர்கள், 1,099 ஊராட்சித் தலைவர்கள், 8,247 ஊராட்சி உறுப்பினர்கள், 47 மாவட்டக்குழு உறுப்பினர்கள், 243 பேரூராட்சிக்குழு உறுப்பினர்கள் என்று மொத்தம் 10 ஆயிரத்து 25 பதவிகளுக்கு நேரடி வாக்களிப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
   2 ஆயிரத்து 325 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: பின்னர், வாக்காளர்களால் தேர்வான உறுப்பினர்கள் மூலம் 3 நகராட்சித் தலைவர்கள், மற்றும் துணைத் தலைவர்கள், 15 பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், 22 ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், 1,099 ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் என 2,325 பதவிகளுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
   இரண்டு கட்டமாகத் தேர்தல்: உள்ளாட்சிப் பணிகளுக்கான இந்தத் தேர்தல், வரும் அக்.17 மற்றும் 19-ஆம் தேதிகளில், இரு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல்: முதல்கட்டத்தில், அக்டோபர் 17-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வரை நடைபெறும்.
   தேர்தலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நகராட்சிகள். சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, காணை, முகையூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம் உளுந்தூர்பேட்டை ஒன்றியங்கள்.
   அரகண்டநல்லூர், சின்னசேலம், மணலூர்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர், உளுந்தூர்பேட்டை, வடக்கநந்தல் பேரூராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
   இரண்டாம் கட்டத் தேர்தல்: அக்டோபர் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திண்டிவனம் நகராட்சி மற்றும் செஞ்சி, கண்டமங்கலம், கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், ஒலக்கூர், வல்லம், வானூர், விக்கிரவாண்டி ஒன்றியங்கள்.
   அனந்தபுரம், செஞ்சி, கோட்டக்குப்பம், மரக்காணம், வளவனூர், விக்கிரவாண்டி பேரூராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
   வாக்கு எண்ணிக்கை: இரு கட்டத் தேர்தல் முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai