சுடச்சுட

    

    மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
     மாவட்டக்குழுத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும், ஒன்றியக்குழுத் தலைவர், ஒன்றியச் செயலர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
     மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கு 47 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் சேர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.
     மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்.17-ல் நடைபெறுகிறது.
     இதில், போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை திங்கள்கிழமை வெளியிட்டது.
     இதன்படி, வார்டு எண் 1: உமா சங்கர், வார்டு 2: சந்தோஷ், வார்டு 3: பழனிச்சாமி, வார்டு 4: சிவகங்கை, வார்டு 5: இளங்கோவன், வார்டு 6: ஜெயந்தி, வார்டு 7: மகாலட்சுமி, வார்டு 8: செண்பகவேல், வார்டு 9: மகேஷ், வார்டு 10: ஜெயச்சந்திரன், வார்டு 11: தண்டாயுதபாணி, வார்டு 12: பாரதா அரங்கநாதன், வார்டு 13: முத்தமிழ் செல்வன், வார்டு 14: சீதா கலியபெருமாள், வார்டு 15 விஜயா, வார்டு 16: சத்தியவாணி, வார்டு 17: குமுதா, வார்டு 18: ஷர்மிளாதேவி, வார்டு 19: லதா, வார்டு 20: சிவசக்தி, வார்டு 21: மலர், வார்டு 22: உஷாராணி, வார்டு 23: செல்வசுந்தரி, வார்டு 24: நடராஜன், வார்டு 25: சரசு மாணிக்கம், வார்டு 26: ஜெயகிருஷ்ணன், வார்டு 27: இந்திரா, வார்டு 28: பக்தவச்சலம், வார்டு 29: வீரப்பன், வார்டு 30: கணபதி, வார்டு 31: விநாயகமூர்த்தி, வார்டு 32: ஆனந்தி, வார்டு 33: ஜெயலட்சுமி, வார்டு 34: கன்னியப்பன், வார்டு 35: தாரணி, வார்டு 36: ராமசரவணன், வார்டு 37: ராஜசேகர், வார்டு 38: தங்கபாண்டியன், வார்டு 39: வனஜா, வார்டு 40: முனியமுத்து, வார்டு 41: செல்வராணி, வார்டு 42: ராஜலட்சுமி, வார்டு 43: சன்னியாசி, வார்டு 44: பாண்டியன், வார்டு 45: மீனா, வார்டு 46: முனியம்மாள், வார்டு 47: முத்தம்மாள் என்று வேட்பாளர் பட்டியல் தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவித்தனர்.
     இதில், முன்னாள் எம்எல்ஏ கணபதி, 23 பெண்கள், ஒன்றியச் செயலர்கள், துணைச் செயலர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், தற்போதைய மாவட்டக்குழு உறுப்பினர்கள் என பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
     இதில், மாவட்டக்குழுத் தலைவராக உள்ள அலமேலு வேலு மற்றும் பல மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai