சுடச்சுட

  

  மாவட்ட எல்லைப் பகுதியில் இரட்டை வாக்குரிமை புகார்

  By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் புதுவை மாநில எல்லைப் பகுதிகளில் இரட்டை வாக்குரிமை தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
   விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வானூர் ஒன்றியம், கோட்டக்குப்பம் பேரூராட்சி, கண்டமங்கலம் ஒன்றிய பகுதி கிராமங்கள்,
   புதுவை மாநில எல்லையில் அமைந்துள்ளன.
   எல்லைப் பகுதியில் வசித்து வரும் பலர், தமிழக பகுதியிலும், புதுவை மாநில பகுதியிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
   தமிழக பகுதிகளை பூர்வீகமாக கொண்ட இவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக புதுவை பகுதியில் குடியேறுவது வழக்கம். இவ்வாறு செல்லும் பலர், இங்கும் குடியுரிமையை தொடர்வதோடு, புதுவை மாநிலத்திலும்
   குடிமைப்பொருள் வழங்கல் அட்டை, வாக்குரிமை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று வந்தனர்.
   இதுதொடர்பாக புகார்கள் எழும்போது, தேர்தல் வாக்காளர் பட்டியல் தயார்படுத்தும் நேரங்களில் மேலோட்டமான ஆய்வு மேற்கொள்வதும்,
   சிலரது பட்டியலை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் தொடர்கிறது.
   இந்த வகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதுவை மற்றும் தமிழக பகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
   இதுகுறித்து, சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
   தற்போது, தமிழக பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இவர்கள் தமிழக வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர். பெரும்பாலும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, கடும் நெருக்கடி காரணமாக இவர்கள் புதுவையில் வாக்களிக்கின்றனர்.
   இதுகுறித்து, வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் புகார் தெரிவித்துள்ள கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்
   இளங்கோ கூறுகையில், தற்போது, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் இல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், இங்குள்ள வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர்.
   இதற்கான வாக்காளர் பட்டியல் ஆவணங்களுடன புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதால், அரசியல் கட்சியினரும் அது பற்றி புகார் தெரிவிப்பதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை என்றார்.
   இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, இவை கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆதார் எண்கள் இணைக்கப்படுவதால், போலியான நபர்கள் படிப்படியாக நீக்கப்பட்டுவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் அவசர காலத்தில் தயாராகிவிட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி வெளியாகவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்பின்போது இந்தக் குறைபாடுகள் நீக்கப்படும் என்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai