சுடச்சுட

  

  விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
   விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு ரேஷன் பொருள்கள் கட்டத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்து.
   தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் 2 சாக்கு மூட்டைகளுடன் வந்த பெண்ணை மடக்கி சோதனையிட்டனர்.
   அந்த மூட்டைகளில் 50 கிலோ ரேஷன் அரிசி, 50 ரேஷன் துவரம் பருப்பு இருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர் புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி முத்துலட்சுமி
   (35) என்பதும், வளவனூர், மேல்பாதி, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் பொருள்களை வாங்கி புதுச்சேரிக்கு கடந்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, முத்துலட்சுமியை கைது செய்த போலீஸார், ரேஷன் பருப்பு மற்றும் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மொபெட்டையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai