சுடச்சுட

    

    விழுப்புரம் நகராட்சியில் வார்டுகள் ஒதுக்கீடு விவரம்

    By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
     விழுப்புரம் நகராட்சியில், நகரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து இணைக்கப்பட்ட பகுதிகள் சேர்த்து, மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில், வார்டு எண் 2, 3, 4, 5, 6, 11, 13, 16, 17, 19, 21, 23, 24, 25, 26, 28, 35, 37 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
     வார்டு எண் 1, 9, 7, 8, 10, 12, 18, 20, 22, 29, 31, 32, 34, 36, 38, 39, 40, 41 ஆகியவை பொதுப் பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
     வார்டு எண் 27, 33, 42 ஆகியவை தாழ்த்தப்பட்டோருக்கும், வார்டு எண் 15, 16, 30 ஆகியவை தாழ்த்தப்பட்டோரில் பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
     நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. ஆணையர்(பொ) சையதுமுஸ்தபாகமால் தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார்.
     உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சிப் பொறியாளர் சுரேந்திரன், வார்டு எண் 1 முதல் 11 வார்டில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களைப் பெறுகிறார். மற்றொரு உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் அலுவலர் சௌந்தரராஜன் வார்டு 12 முதல் 22 வரை வேட்பு மனுக்களை பெறுவார். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா, 23 முதல் 32வது வார்டு வரை உள்ளவர்களின் வேட்பு மனுக்களை பெறுவார். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் வார்டு எண் 33 முதல் 42வது வார்டு வரை போட்டியிடுபவர்களின் மனுக்களைப் பெறுகிறார்.42 வார்டுகளுக்கும் அக்.3-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர், வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, 113 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு முறையில் வரும் அக்.17ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai