சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: தயார் நிலையில் வாக்குப் பெட்டிகள்

    By விழுப்புரம்,  |   Published on : 28th September 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
     விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கானத் தேர்தல் வரும் அக்.17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
     ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகிய 10 ஆயிரத்து 25 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
     இதற்காக, ஆயத்தப் பணிகளை தேர்தல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
     கிராம ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
     இதற்காக வாக்குப் பெட்டிகள் தயார்படுத்தும் பணிகளை தேர்தல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில், 11 ஆயிரத்து 475 வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
     விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர், மயிலம், விக்கிரவாண்டி, காணை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் இந்த வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.தற்போது, அந்தந்த ஒன்றியத்திற்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
     கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 5,135 வாக்குப் பெட்டிகள் உள்ளன.
     இந்த வாக்குப் பெட்டிகள் வல்லம், ஒலக்கூர், மரக்காணம், வானூர், கண்டமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் லாரிகளில் அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசமூர்த்தி மேற்பார்வையில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai