காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு
By விழுப்புரம், | Published on : 28th September 2016 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்கள் செவ்வாய்க்கிழமை பெறப்பட்டன.
விழுப்புரம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன் தலைமை வகித்தார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.விஜயன், மீனாட்சி வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
விண்ணப்பத்திற்கான தொகையை செலுத்தி கட்சியினர் விருப்ப மனுக்களைப் பெற்று வழங்கினர்.
மாவட்ட பொதுச் செயலர்கள் தயானந்தம், முபாரக், துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், நகரத் தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் அகமது, நகரச் செயலாளர் சோமு, பாபாஜி, வாசுதேவன், ரமணன், எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ்ராம் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து, கூட்டணி கட்சியான, திமுக மாவட்டச் செயலர் பொன்முடியை சந்தித்து ஆலோசனை நடத்தி உரிய இடங்கள் பெறப்படும் என்றனர்.