சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே தொடர் கொலை, கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
     விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பாபு மகன் தீபக் என்கிற தீபக்ராஜ் (33). இவர் கொலை, கொலை முயற்சி, சாராயம் கடத்தல் போன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
     இதனை, பரிசீலித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தீபக்ராஜை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
     இதையடுத்து, வளவனூர் போலீஸார் தீபக்ராஜை கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai