சுடச்சுட

  

  திருக்கோவிலூரில் சிதைவுபடும் அபாயத்தில் உள்ள கோபுரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
   திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற திருவிக்ரம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் தொடக்கத்தில் ராஜகோபுரம் உள்ளது.
   கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் இந்தக் ராஜகோபுரம், மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒரே கோபுரம் ஆகும்.
   சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்ற இக்கோபுரத்தில் பல இடங்களில் செடி, கொடிகள், மரக்கன்றுகள் மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன.
   நாளடைவில் இவை வேரூன்றி, கோபுரத்தின் கட்டுமானம் பலவீனமடைந்து, இடிந்து விழும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
   இக்கோபுரம் மட்டுமன்றி, திருக்கோயில் கோபுரங்களும் இவ்வாறு சரிவர பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே செடி, கொடிகள், மரக்கன்றுகள் வளர்ந்து காணப்படுகின்றன.
   ஆலய நிர்வாகம் ஆன்மிக நாட்டமுடைய இளைஞர்களைக் கொண்டு, உழவாரப் பணிகளை மேற்கொண்டால், இக்கோபுரங்களை பாதுகாக்க முடியும்.
   எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai