சுடச்சுட

  

  தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து குழந்தை சாவு

  By விழுப்புரம்,  |   Published on : 28th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் அருகே தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
   விழுப்புரம் அருகே கெடாரை அடுத்த வெங்கந்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
   அந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வராததால், செவ்வாய்க்கிழமை காலை சாந்தி பக்கத்து தெருவுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது, வீட்டில் இருந்த குழந்தை தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
   இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தி மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் குழந்தையின் உடலை கொண்டு சென்றனர்.
   சாலை மறியல்: இந்த நிலையில், பக்கத்து தெருவுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றதால் குழந்தையை கவனிக்க முடியாமல் போனது என்றும், முறையாக குடிநீர் வழங்காததே குழந்தையின் இறப்புக் காரணம் என்றும் கூறி, செவ்வாய்க்கிழமை மாலை கிராம மக்கள் சூரப்பட்டு-பெரும்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
   அப்போது, இரண்டு அரசுப் பேருந்துகளை அவர்கள் சிறைப் பிடித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து காணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் கெடார் போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தினர்.
   இதையடுத்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai