சுடச்சுட

    

    நிதி நிறுவன ஊழியரை மிரட்டி ரூ.70 ஆயிரம் பறிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 28th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வானூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை மிரட்டி ரூ.70 ஆயிரம் ரொக்கம், செல்லிடப் பேசியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
     மரக்காணம் அருகே கூணிமேடுகுப்பம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மக ன் மேகநாதன்(22). இவர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை பெரும்பாக்கம் அருகே உள்ள பரங்கணி, அம்புதுகை பகுதிகளுக்குச் சென்று பணம் வசூல் செய்தார். பின்னார், அங்கிருந்து தெள்ளாமூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி-மயிலம் சாலையில் தொள்ளாமூர் ஆற்றுப் பாலத்தில் சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் மேகநாதனை, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.71,360 ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai