சுடச்சுட

    

    மாணவர்கள் மர்மச் சாவு: பள்ளி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

    By திருக்கோவிலூர்,  |   Published on : 28th September 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூரில் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர்களின் மர்மச் சாவு குறித்து, பள்ளி நிர்வாகி உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
     திருக்கோவிலூர்-சந்தப்பேட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு, உறைவிடப் பள்ளியும், சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகமும் செயல்பட்டு வந்தது.
     இந்த சிறப்புப் பள்ளியில் கடந்த 4-ஆம் தேதி மாணவர்கள் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
     இதனைத் தொடர்ந்து, இப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்தும் பள்ளி திறக்கப்படவில்லை. ஆனால், மாணவர்கள் அருகாமையில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
     இதையடுத்து உயிரிழந்த மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை முடிவுக்குப் பின்புதான், பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியும் என்று மாவட்ட கல்வி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
     இந்நிலையில், தற்போது உடற்கூறு மருத்துவப் பரிசோதனையில் மாணவர்கள் விவசாயப் பயிருக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
     மேலும், இப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் இருந்து, இந்த பூச்சி மருந்து மாணவர்கள் கைக்குக் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
     இதையடுத்து இப்பள்ளி நிர்வாகி செல்வராஜ்(48), தமிழாசிரியை ராஜேஸ்வரி(24), நிலத்தில் பயிரிட்டு வந்த ராதா(60) ஆகிய 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக கைது செய்தனர்.
     பின்னர், திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செல்வராஜ், ராதா ஆகியோர் திருக்கோவிலூர் கிளைச் சிறையிலும், ராஜேஸ்வரி கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai