சுடச்சுட

    

    மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 47 பேரும் மனு தாக்கல்

    By விழுப்புரம்,  |   Published on : 28th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் 47 பேரும் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர்.
     உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, அதிமுக வேட்பாளர்கள் 47 பேர் ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 14-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு போட்டியிட உள்ள, தற்போதைய கோலியனூர் ஒன்றியக் குழுத் தலைவரான அதிமுக வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு நண்பகல் 12.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
     இதே நேரத்தில், 15-வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் கல்லப்பட்டைச் சேர்ந்த சுதரிதனலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
     அதிமுக ஒன்றியச் செயலாளர் முருகன், வளவனூர் பேரூராட்சித் தலைவர் முருகவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவர் வளர்மதி உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
     வானூர்: வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 30வது வார்டுக்கு முன்னாள் எம்எல்ஏ கணபதியும், 28-வது வார்டுக்கு ஒன்றியச் செயலர் பக்தவச்சலமும், 29வது வார்டுக்கு வீரப்பன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் 18வது வார்டுக்கு ஒன்றியக் குழுத் தலைவரான சர்மிளாதேவியும், காணையில் 13வது வார்டுக்கு ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், 12வது வார்டுக்கு ஒன்றிய இணைச் செயலர் பாரதா அரங்கநாதன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
     திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கே.உமாசங்கர், எஸ்.கே.டி.சி.சந்தோஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முகையூர் ஒன்றியத்தில் உள்ள மூன்று பதவிகளுக்கு டி.எஸ்.பழனிச்சாமி, எஸ்.இளங்கோவன், சிவகங்கை ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு பதவிகளுக்கு செல்வராணி, ராஜலட்சுமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு பதவிகளுக்கு, அதிமுகவைச் சேர்ந்த சன்னியாசி, பாண்டியன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் ஜெயலட்சுமிஜெகதீசன், கன்னியப்பன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     ஒன்றியச் செயலர் அ.கோவிந்தசாமி, ஒன்றியக்குழுத் தலைவர் லட்சுமிசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     வல்லம் ஒன்றியத்தில் உறுப்பினர் பதவிக்கு, ஒன்றிய அதிமுக செயலர் கு.விநாயகமூர்த்தியும், முன்னாள் வல்லம் ஒன்றியக்குழுத் தலைவர் கா.அண்ணாதுரையின் மனைவி கா.ஆனந்தியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     வல்லம் ஒன்றியக்குழுத் தலைவர் (பொ)பரிமளா பன்னீர்செல்வம், ஆனாங்கூர் ஊராட்சித் தலைவர் கஸ்தூரி விநாயகமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன், பென்னகர் ஊராட்சித் தலைவர் ராஜமுத்துஅசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 37வது வார்டுக்கு க.செல்லம்பட்டைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ஏ.எஸ்.ஏ.இராஜசேகர் (51) வேட்புமனு தாக்கல் செய்தார்.
     38-வது வார்டுக்கு க.அலம்பலத்தைச் சேர்ந்த பழனி மகன் தங்கபாண்டியன் (52) வேட்புமனு தாக்கல் செய்தார்.
     இவ்விரு மனு தாக்கலின் போது க.காமராஜ் எம்.பி., அ.பிரபு எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ப.மோகன், அதிமுக அவைத் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் அ.ரங்கன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
     சின்னசேலம் ஒன்றியத்தில் 39-வது வார்டுக்கு மூங்கில்பாடியைச் சேர்ந்த அழகன் மகன் முனியமுத்து மனு தாக்கல் செய்தார்.
     40-வது வார்டுக்கு குதிரைசந்தலைச் சேர்ந்த அய்யாதுரை மனைவி வனஜா மனு தாக்கல் செய்தனர்.
     தியாகதுருகம் ஒன்றியத்தில் 45-வது வார்டுக்கு வடதொரசலூரைச் சேர்ந்த சுப்புமகாலிங்கம் மனைவி மீனா மனுதாக்கல் செய்தார்.
     46-வது வார்டுக்கு சிறுநாகலூரைச் சேர்ந்த சின்னக்கன்னு மனைவி முனியம்மாள், குபேந்திரன் மனு தாக்கல் செய்தனர்.
     உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 71 பேர் மனு தாக்கல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக சார்பில் எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் தண்டாயுதபாணியும், திமுக சார்பில் ஆரோக்கியதாஸþம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 61 பேர் உள்பட மொத்தம் 71 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     திருநாவலூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்
     தனர்.
     திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai