சுடச்சுட

    

    மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் நாளில் 691 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
     விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி 47, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி 473, ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 1099, ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவி 8,247, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 96, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 243 என மொத்தம் 10 ஆயிரத்து 25 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
     வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட்ட இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 49 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 வேட்பு மனுக்களும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 27 வேட்பு மனுக்களும், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 605 வேட்பு மனுக்களும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பு மனுக்களும் என மொத்தம் 691 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai