Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மீது டிராக்டர் மோதல்: ஒருவர் சாவு, 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து மீது டிராக்டர் மோதல்: ஒருவர் சாவு, 3 பேர் காயம்

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 29th September 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மீது டிராக்டர் மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
     நெல்லை மாவட்டம், செங்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து சென்னை நோக்கி சென்றது. பேருந்தை புதுக்குடியைச் சேர்ந்த செல்வம் (38) ஓட்டி வந்தார். பேருந்து, செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஆசனூர் பெரியாயி கோயில் அருகே வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் பேருந்து மீது மோதியது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த விருத்தாசலம் அருகேயுள்ள புலியூரைச் சேர்ந்த தர்மலிங்கம் (57) காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த நாகசரவணன் (48), அவரது மகள் கவிதா (19), செங்கேணிகுப்பம் சத்யராஜ் (25) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மூவரையும் மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்வம் அளித்த புகாரின்பேரில், எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai