சுடச்சுட

  

  ஆரோவில் அருகே விபத்து: 3 மருத்துவ மாணவர்கள் சாவு

  By விழுப்புரம்,  |   Published on : 29th September 2016 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே, கிழக்கு கடற்கரைச் சாலையில், புதன்கிழமை அதிகாலை கார் மீது லாரி மோதியதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
   கன்னியாகுமரி மாவட்டம், செங்கம்புதூரைச் சேர்ந்தவர் தங்கநாடார் மகன் தங்கக்குமரன் (23). சென்னை, கொளத்தூர் பொன்னியம்மன்மேடு, பாரதி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகன் அரவிந்த்குமார் (22), சென்னை மத்திய கைலாஷ் வாதாபுரத்தைச் சேர்ந்தவர் அனந்தராமன் மகன் ஹரிபிரசாத் (23), வேலூர் காட்டுக்குடி பாரதி தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன் (23).
   இவர்கள் நான்கு பேரும் புதுச்சேரி, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தனர்.
   சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, இவர்கள் புதுச்சேரியில் இருந்து காரில் புதன்கிழமை அதிகாலை 1 மணி அளவில் புறப்பட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆரோவில் அருகே, பொம்மையார்பாளையம் பகுதியில் சென்றபோது, சென்னையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.
   அத்துடன், சாலையோர மின்கம்பத்திலும் லாரி மோதி, சிறிது தூரம் ஓடி நின்றது. இதனால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதையடுத்து, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
   இந்த விபத்தில் ஹரிபிரசாத், தங்கக்குமரன், அரவிந்தகுமார் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பாலகிருஷ்ணன் காயமடைந்தார்.
   விபத்து நிகழ்ந்தது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. பின்னர், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், ஆரோவில் போலீஸýக்கு தகவல் கொடுத்ததையடுத்து, காவல் ஆய்வாளர் பிரதீப்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, காரின் இடிபாட்டில் சிக்கிய பாலகிருஷ்ணனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   மேலும், காரில் சிக்கியிருந்த மூவரின் சடலங்களையும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலகிருஷ்ணன் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
   விபத்து குறித்து ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai