சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: ஒரே நாளில் 3,996 பேர் வேட்புமனு தாக்கல்

    By விழுப்புரம்  |   Published on : 29th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை 3,996 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
     மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி 47, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி 473, ஊராட்சித் தலைவர் பதவி 1099, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 8,247, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 96, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 243 என மொத்தம் 10,205 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
     இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்ட மூன்றாவது நாளான புதன்கிழமை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 11, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 29, ஊராட்சித் தலைவர் பதவிக்கு 501, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,437 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்,
     அதேபோல் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     இந்த மூன்று நாள்களில் இதுவரை மொத்தம் 5,547 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     உளுந்தூர்பேட்டையில்...
     உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் ஒன்றியங்களில் இதுவரை 591 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     உளுந்தூர்பேட்டை ஒன்றியம்: உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2 பேர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 32 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 150 பேர் என மொத்தம் 184 பேர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்: திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
     ஊராட்சித் தலைவர் பதவிக்கு 30 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 227 பேர் என 257 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     திருநாவலூர் ஒன்றியம்: திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 19 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 131 பேர் என இதுவரை 150 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     செஞ்சியில்...
     செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 835 பேர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், மாவட்ட உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 272 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 33 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், மாவட்ட உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 151 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     இதேபோல் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 52 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், மாவட்ட உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 269 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai