சுடச்சுட

    

    கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை

    By விழுப்புரம்,  |   Published on : 29th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
     தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், ஆண்டுதோறும் கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்டறியும் விதத்தில், போலீஸாரின் கூட்டு ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு புதன்கிழமை தொடங்கியது.
     கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. ஞானவேல், ஆய்வாளர்கள் அரிகரன், பிரதீப்குமார், திருமேனி, கருணாகரன், பால்சுதர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தலைமையில் 200 போலீஸாரும், கடலோரக் காவல் படையின் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் 100 போலீஸாரும் மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
     இந்த ஒத்திகை தொடர்ந்து நடைபெறுமென போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai