Enable Javscript for better performance
காவல் ஆய்வாளருக்கு பிடியாணை- Dinamani

சுடச்சுட

    

    சாராய வழக்கில் சாட்சியளிக்க ஆஜராகாத கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     கண்டாச்சிபுரம் பகுதியில் தனியார் அரிசி அரவை ஆலை பின்புறம் கடந்த 5.9.2010 அன்று கள்ளச் சாராயம் விற்பனை செய்த மலவராயன்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலை கண்டாச்சிபுரம் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
     இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
     இந்த வழக்கில் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளராக இருந்த தங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும். இவர், தற்போது நீலகிரி மாவட்டம், குன்னூரில் பணியாற்றி வருகிறார்.
     இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, வெகுநாள்களாக சாட்சியளிக்க ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியணை பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai