Enable Javscript for better performance
செஞ்சியில் கனமழை- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சியில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
     செஞ்சி பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பரவலாகப் பெய்துள்ளதால், தற்போது விதைத்துள்ள மானாவாரி மணிலா பயிர் நன்கு வளர வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai