சுடச்சுட

    

    பூண்டி கிராமத்தில் 2 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
     உளுந்தூர்பேட்டை வட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் அர்ச்சுனன் (58), இவரது மகன் அய்யனார் (26) ஆகியோரது வீடுகளில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
     தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளில் இருந்த சுமார் 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்து விட்டதாம்.
     மின் கசிவு காரணமாக வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
     
     
     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai