சுடச்சுட

    

    தொடரும் விபத்துகள்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

    By விழுப்புரம்,  |   Published on : 29th September 2016 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் தொடரும் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
     சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பகுதி தொலைவு விழுப்புரம் மாவட்டத்தில் அமைத்துள்ளது. நான்கு வழிச் சாலையான இதில் நாள்தோறும் 1000-க்கான வாகனங்கள் கடந்துச் செல்கின்றன.
     இந்நிலையில் மற்ற மாவட்டங்களை விட விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.
     பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, மாவட்டத்தில் அதிகமாக விபத்துகள் நடைபெறும் இடங்களை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை முதன்மை ஆலோசகர் கீர்த்திசத்சேனா, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு இயக்குநர் ரஞ்சன்முகர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். குறிப்பாக, ஜானகிபுரம், எல்லீஸ் சத்திரம் சாலை, செஞ்சி நெடுஞ்சாலைப் பிரிவு, முண்டியம்பாக்கம், கூட்டோரிப்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அப்பகுதிகளில் விபத்தைத் தடுக்க எடுக்க வேண்டும் நடவடிக்கைகள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
     விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் பகுதிகளில் மேம்பாலம், சுரங்கப்பாதை, உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி பின்னர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai