சுடச்சுட

    

    நிலத் தகராறு: அண்ணனை தாக்கிய தம்பி கைது

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 29th September 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலத் தகராறு காரணமாக அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     கள்ளக்குறிச்சி அருகேயுள்ள உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (35). இவருடைய தம்பி சின்னதுரை (29).
     இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் சீனுவசான் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அவரது தம்பி மற்றும் தாய், தந்தை ஆகியோர் சேர்ந்துகொண்டு, சீனுவாசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் சீனுவாசன் காயமடைந்தார்.
     இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னதுரையை கைது செய்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai