சுடச்சுட

    

    தொடர்ந்து இந்து அமைப்பினர் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்களைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தியும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     விழுப்புரத்தில் பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையிலான பாஜகவினரை தடுத்தி நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
     தேசியக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மாவட்டப் பொதுச் செயலர்கள் சுகுமாரன், ஜெயக்குமார், அன்பழகன், நிர்வாகிகள் சக்திவேல், தனசேகர், ராஜிவ், மணி, மாநில மகளிரணிச் செயலர் பூவழகி, மாவட்ட மகளிரணிச் செயலர் தருண்யா, ஒன்றியத் தலைவர்கள் பழனி, பாபு, ஆனந்து, ராஜா, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பாலு உள்ளிட்ட 62 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை தனியார் மண்டபம் ஒன்றில் சிறை வைத்தனர். பின்னர், மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
     கள்ளக்குறிச்சியில்...
     இதேபோல், கள்ளக்குறிச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெற்கு மாவட்டத் தலைவர் ராம்நாத் தலைமையிலான பாஜகவினர் 41 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். பின்னர், மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai