சுடச்சுட

    

    வளவனூர் அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
     வளவனூர் அருகேயுள்ள வடவம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி ஜெயபாரதி(27). இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது தம்பதிக்குள் பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.
     இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி தீக்காயங்களுடன் வீட்டில் கிடந்த ஜெயபாரதியை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
     இந்நிலையில் ஜெயபாரதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தனது மகளின் சாவில் சந்தேகமிருப்பதாக வளவனூர் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai