Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 3 பேர் கைது, 2 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தல்: 3 பேர் கைது, 2 லாரிகள் பறிமுதல்

    By விழுப்புரம்  |   Published on : 29th September 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
     விக்கிரவாண்டி போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணியில் இருந்தபோது, விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கிச் சோதனையிட்டனர். அப்போது உரிய அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பேரங்கியூரைச் சேர்ந்த சேகர் மகன் துக்காராம் (25), கிளினர் லட்சுமணன் மகன் ராஜேந்திரன் (28) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     தொடர்ந்து அங்கு வாகனச் சோதசனையில் ஈடுப்பட்ட போலீஸார் மணல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பேரங்கணியைச் சேர்ந்த அண்ணாதுரையை (31) போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக
     விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai