Enable Javscript for better performance
மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

    By விழுப்புரம்,  |   Published on : 29th September 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
     விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சிவா (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்தவர் செவ்வாய்க்கிழமை கண்டமானடி ஆழங்கால் வாய்க்கால் அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
     தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், சிவாவின் சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     மற்றொரு சம்பவம்: கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு மனைவி சந்திரா ((25). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
     இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக, சந்திரா வீட்டிலிருந்த எலி மருந்தை கடந்த 23-ஆம் தேதி சாப்பிட்டாராம். இதனால் மயக்கமடைந்த அவரை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
     இது குறித்து சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     மேலும் ஒரு சம்பவம்: உளுந்தூர்பேட்டை வட்டம், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் அய்யப்பன் (40) விவசாயியான இவருக்கு சில மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாம். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் குணமாகாததால், விரக்தி அடைந்த அய்யப்பன் புதன்கிழமை விஷம் குடித்துவிட்டாராம். உறவினர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு உயிரிழந்தார்.
     இது குறித்த புகாரின்பேரில், திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai