சுடச்சுட

    

    வானூரில் மழையின்போது மின்னல் பாய்ந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் அவரது இரு மகள்கள் காயமடைந்தனர்.
     வானூர், மரக்காணம் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையின் போது, வானூர் அருகே தைலாபுரம், ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள ரங்கநாதனின் வீட்டில் மின்னல் பாய்ந்தது.
     வீட்டின் வெளியே இருந்த தென்னை மரத்தில் மின்னல் பாய்ந்ததால், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ரங்கநாதன் மனைவி அமுதா (32), அவரது மகள்கள் சுஸ்மிதா (12), சுவேதா (10) ஆகியோரது உடலில் தீப்பிடித்து காயமடைந்தனர்.
     அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த அவர்களை மீட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
     இத்தகவலை அறிந்த சக்கரபாணி எம்.எல்.ஏ., ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியதோடு, ரூ. 2,000 நிதியுதவி அளித்தார். இதேபோல் மரக்காணத்தில் பெய்த கனமழையால், திண்டிவனம் சாலை, மேட்டுத் தெருவில் இருந்த புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால், அருகிலிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பம் உடைந்து அருகே வசித்து வந்த நரிக்குறவர் குடிசையின் மீது வீழ்ந்தது. இதனால், அப்பகுதியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
     மழை நிலவரம்: செஞ்சி 51 மி.மீட்டர், திண்டிவனம் 20 மி.மீ, வானூர் 20 மி.மீ, மரக்காணம் 46 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 17 மி.மீட்டர் மழை பதிவானது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai