சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கை மையம்: மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு

    By திருக்கோவிலூர்,  |   Published on : 29th September 2016 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை, மாவட்டத் திட்ட இயக்குநர் ஆர்.மணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
     திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமாக, திருக்கோவிலூர் - சந்தப்பேட்டையில் உள்ள ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
     இம்மையத்தைப் பார்வையிட்டு, வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்.மணி, கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் ஏ.சுந்தரேசன், திருக்கோவிலூர் உதவி செயற்பொறியாளர் எஸ்.ஜோதிவேலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
     திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜே.கண்ணன், பொறியாளர்கள் தனபால், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai