சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்:  இதுவரை 7,294 பேர் மனு தாக்கல்

    By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 7,294 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 1,747 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர், உறுப்பினர், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 1,125 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் அக். 17, மற்றும்
     19-இல் நடைபெற உள்ளது.
     இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4-ஆவது நாளான வியாழக்கிழமை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு 33 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 287 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 1,409 பேரும், நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 2 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேரும் என 1,747 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,294 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     உளுந்தூர்பேட்டையில்...
     உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், தலைவர் பதவிக்கு 20 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 2 பேர் உள்பட மொத்தம் 106 பேர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்: திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 21 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 111 பேர் உள்பட மொத்தம் 132 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
     திருநாவலூர் ஒன்றியம்: திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 19 பேர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 83 பேர் உள்பட மொத்தம் 110 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai