சுடச்சுட

    

    கந்துவட்டி வசூலித்தவருக்கு ஓராண்டு சிறை

    By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
     சித்தாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது தந்தை கடந்த 2003-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த தன்ராஜ் மகன் மோகனிடம் (43) ரூ. 80,000 கடன் பெற்றாராம். இதற்கு வட்டித் தொகையாக மாதந்தோறும் ரூ. 4,000 வீதம் சுமார் ரூ. 2.70 லட்சத்தை மோகன் வசூலித்தாராம்.
     இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மாயவன் உயிரிழந்தார். அதன்பிறகு பிரகாஷிடம் மோகன் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்தாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பிரகாஷின் சகோதரி பிரேமாவை மோகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
     இது குறித்து பிரகாஷ் விழுப்புரம் குற்றப் புலனாய்வு போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் மோகன் மீது வழக்குத் தொடுத்தனர்.
     இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விக்னேஷ் பிரபு, கந்துவட்டி வசூலித்த மோகனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai