Enable Javscript for better performance
காதலிக்க மறுத்த பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    காதலிக்க மறுத்த பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 30th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
     கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கச்சிராயப்பாளையம், பழைய விநாயகர் கோயில் சாலையில் வசித்து வருபவர் முருகேசன் மகன் சுரேஷ். இவர், அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
     இந்நிலையில் கடந்த 21.3.2009 அன்று மாணவியின் வீட்டுக்குச் சென்று காதலிப்பதாகக் கூறியுள்ளார். மாணவி மறுக்கவே அவரைக் கத்தியால் வெட்டியுள்ளார். இது தொடர்பாக போலீஸார் அத்து மீறி வீட்டில் நுழைந்து கொலை செய்ய முயற்சித்ததாக சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
     வழக்கு விசாரணை முடிந்து வியாழக்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுரேஷுக்கு (35) அத்து மீறி வீட்டில் நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்ய முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai