சுடச்சுட

  

  உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
   மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாயுமானவர் (40) விவசாயியான இவர், தனது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வியாழக்கிழமை காலை சென்றார்.
   அப்போது அவரது கிணற்றிலிருந்து சப்தம் கேட்டுள்ளது. கிணற்றில் பார்த்தபோது, மான் ஒன்று விழுந்திருப்பது தெரிய வந்தது.
   இதனையடுத்து அவர், உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறைக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
   தீயணைப்புத் துறையினர் வந்து, கிணற்றில் தவறி விழுந்த மானை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
   வனத்துறையினர் மானை அருகேயுள்ள எடைக்கல் காப்பு காட்டில் விட்டனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai