சுடச்சுட

  

  கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணி தொடங்கி, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
   கோலியனூர் ஊராட்சி ஒன்றியக் குழுவில், 20 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளும், 43 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளும், 324 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளும் உள்ளன.
   ஒன்றியக் குழு உறுப்பினர்கள் விவரம்: 1. கொண்டங்கி உள்ளிட்ட கிராமப் பகுதிகள், 2. கல்லப்பட்டு, 3. மேல்பாதி ஆகியவை தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 4. கப்பூர், 5. காவணிப்பாக்கம், 6. சாலையாம்பாளையம் பகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 7. ஆசாரங்குப்பம், 8. ஆலாத்தூர், 9. அத்தியூர்திருவாதி, 10. கண்டமானடி, 11. மழவராயனூர், 12. பனங்குப்பம், 13. கோலியனூர் பகுதிகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 14. தென்னமாதேவி, 15. கண்டம்பாக்கம், 16. ஆனாங்கூர், 17. தளவானூர், 18. அரசமங்கலம், 19. இளங்காடு, 20. அய்யங்கோயில்பட்டு பகுதிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
   கிராம ஊராட்சிகள்: கோலியனூர் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், 13 ஊராட்சிகள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கும், 15 ஊராட்சிகள் பெண்களுக்கும், 15 ஊராட்சிகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   மாவட்ட ஊராட்சி: இரண்டு மாவட்டக் குழு உறுப்பினர் (14 -ஆவது, 15 -ஆவது வார்டுகள்) பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
   இந்த பதவிகளுக்கு வரும் அக். 17-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
   தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai