சுடச்சுட

  

  செஞ்சி அருகே 1,900 மது பாட்டில்கள் பதுக்கல்: ஒருவர் கைது

  By செஞ்சி,  |   Published on : 30th September 2016 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில மது பாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
   இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
   செஞ்சி வட்டம், பாக்கம் காலனியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார், அந்தக் கிராமத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, முருகன் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள முள் புதரில் பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த 1,900 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், அந்த வீட்டின் உரிமையாளர் முருகன் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்.
   இந்த மது பாட்டில்கள் உள்ளாட்சித் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai