சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து சுமார் 230 மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகினர்.
     கனியாமூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் மேற்பார்வையாளராக ஜெயராமன் பணி புரிந்து வருகிறார்.
     இவர், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் வந்து கடையைத் திறந்தபோது, ஜன்னல் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
     கடையில் பணம் ஏதும் இல்லை என்றாலும், மது பாட்டில்கள் திருடப்பட்டிருக்கலாம் என அவர் பாட்டில்களை கணக்கிட்டுப் பார்த்துள்ளார். அப்போது 230 மது பாட்டில்கள் குறைவது தெரிய வந்தது. அவை திருடப்பட்டதை உறுதி செய்த
     ஜெயராமன், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai