சுடச்சுட

    

    தவணை முறையில் வீட்டுமனை தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

    By விழுப்புரம்  |   Published on : 30th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி அருகே தவணைமுறையில் வீட்டுமனை தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 7 பேர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
     இது குறித்து விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. உதயகுமார் கூறியதாவது: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவராமரெட்டியார் மகன் பிரபு (45). இவரது மனைவி லதா, சகோதரர்கள் ஜனார்த்தனன், தனசேகரன், பாண்டியராஜன் ஆகியோர் விழுப்புரம் திருச்சி பிரதான சாலையில் எல்.பி.எஸ். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தனர்.
     இந்நிறுவனத்தின் மூலம் விக்கிரவாண்டி, வி.சாத்தனூர் ஆகிய பகுதிகளில் வீட்டுமனை பிரிவு திட்டத்திலும், எளிய தவணை
     முறைத் திட்டத்தில் வார குலுக்கல் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
     இவர்களிடம் சிறுவாளை, சொர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் பணம் கட்டி வீட்டுமனை பதிவு செய்யாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
     இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபு, லதா, ஜனார்த்தனன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில் எல்.பி.எஸ். நிறுவனத்தில் வீட்டுமனைக்குப் பணம் கட்டி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என்றும், இதுபோல் முறையாக அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனை விற்கும் நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாறவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai