Enable Javscript for better performance
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 30th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மீது வெளியாள்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
     திருவள்ளுவர் பல்கலை. உறுப்புக் கல்லூரியான கள்ளக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவரை வெளியாள்கள் கல்லூரிக்குள் நுழைந்து, வெளியே அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றொரு மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
     இது குறித்து தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ.மதிவாணன், காவல் ஆய்வாளர் ப.பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்து போலீஸார் வகுப்புகளுக்கு அனுப்பினர்.
     இந்நிலையில் எவ்வித அறிவிப்புமின்றி சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 மாணவிகள் மற்றும் 20 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai