சுடச்சுட

    

    பேருந்து மீது லாரி மோதல்: காவலர்கள் உள்பட 10 பேர் காயம்

    By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் காவலர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
     விக்கிரவாண்டி அருகே ரெட்டணையில் இருந்து விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை சிறுமதுரையைச் சேர்ந்த ராஜாராம் (43) ஓட்டி வந்தார். நெடி கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (38) நடத்துநராக இருந்தார்.
     பேருந்து சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பிற்பகல் 2.45 மணியளவில் சித்தணியை அடுத்த வி.சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அப்போது பின்னால் வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தின் பின்பகுதி நொறுங்கியது.
     இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நெடி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (65), இவரது மகன் துரை (43), தும்புரை கிராமத்தைச் சேர்ந்த கலா (38), சிறுவந்தாட்டையைச் சேர்ந்த சங்கர், ஆயுதப்படை காவலர்கள் சபியுல்லா (23), சுந்தர் (23), ஸ்ரீதர் (22) மற்றும் பேருந்து ஓட்டுநர் ராஜாராம் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
     தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai