சுடச்சுட

    

    மது கடத்தியவர் தப்பியோட்டம்: 3,200 மது பாட்டில்கள், வேன் பறிமுதல்

    By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வளவனூர் அருகே வேனில் கடத்தப்பட்ட 3,120 மது பாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி. நரேந்திரன் நாயர் உத்தரவின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்ஜோசப் தலைமையிலான மதுவிலக்கு போலீஸார் வளவனூர் அருகேயுள்ள கெங்கராம்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களைச் போலீஸார் சோதனையிட்டனர்.
     அப்போது அவ்வழியாக வந்த வேனை போலீஸார் நிறுத்த முயன்றனர். அது நிற்காமல் வேகமாக விழுப்புரம் நோக்கிச் சென்றது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அந்த வேனை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
     இந்நிலையில், அந்த வேனை வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் நிறுத்திவிட்டு வேனில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்தொடர்ந்து சென்ற போலீஸார் வேனை சோதனையிட்டதில் இருக்கைகளுக்கு அடியில் 65 பெட்டிகளில் மொத்தம் 3,120 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் எனக் கூறப்படுகிறது.
     மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனை போலீஸார் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிவர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai