Enable Javscript for better performance
மரக்காணத்தில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், மரக்காணம் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
     விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி செஞ்சியில் 51 மில்லி மீட்டரும், மரக்காணத்தில் 46 மி.மீ., திண்டிவனம், வானூர் பகுதியில் 20 மி.மீ. மழையும் பதிவானது.
     காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரக்காணம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.
     மரக்காணத்தில் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டரும், வானூர், கோட்டக்குப்பம் பகுதியில் 41 மி.மீ., சங்கராபுரத்தில் 27 மி.மீ., திருக்கோவிலூரில் 17, திண்டிவனத்தில் 15, விழுப்புரத்தில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
     மாவட்டத்தில் மொத்தம் 160 மி.மீ., சராசரியாக 20 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
     திருக்கோவிலூரில் வியாழக்கிழமை மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
     இதேபோல விழுப்புரம், மரக்காணம், உளுந்தூர்பேட்டை பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai